உக்ரைன் சுரங்கப் பாதையில் இருந்து இலங்கை மாணவன் வௌியிட்டுள்ள தகவல்

0

ரஷ்ய இராணுவ படையெடுப்பை தொடர்ந்து உக்ரைனில் சிக்கியுள்ள இலங்கை இளைஞன் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரஷ்ய தாக்குதலில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக தானும் உக்ரேனியர்களுடன் ரயில் சுரங்கப்பாதைக்கு வந்ததாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியாத பலர் நேற்று முதல் நிலத்தடி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

“நான் உக்ரைனில் படிக்கும் இலங்கை மருத்துவ மாணவன். நான் தற்போது கியூவில் இருக்கிறேன். இலங்கை செல்ல நாம் போலந்து செல்ல வேண்டும்.” “அதற்கு, நாம் போலந்து எல்லைக்கு அருகில் செல்ல வேண்டும். இப்போது ரஷ்ய இராணுவமும் தலைநகரான கியூவை நெருங்குகிறது என்று நினைக்கிறேன்.

அவர்கள் ஏற்கனவே தாக்குதலைத் தொடங்கிவிட்டனர்.” “கியூவ் மக்கள் இப்போது கூடியிருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். நாங்கள் சுரங்கப்பாதையை பதுங்கு குழியாகப் பயன்படுத்தி, அதனுள் மறைந்து இருக்கிறோம். இதனால் நாங்கள் குண்டுவெடிப்பு மற்றும் ஷெல் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க முடியும்.

இலங்கை அரசாங்கம் எங்களைக் காப்பாற்றும் என்று நம்புகிறோம்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here