இலங்கையில் இணையத்தள பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை

0

இணையதளம் மூலம் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது கணினி குற்ற விசாரணை பிரிவுக்கு நாளாந்தம் 15 முதல் 20 முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

எனவே, இணையவழி மோசடிகள் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

படங்களை காண்பித்து பெண்களை அச்சுறுத்தும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன.எனவே, அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

சகல சந்தர்ப்பங்களிலும் மோசடிகள் மற்றும் குற்றங்கள் என்பன தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள்.

அவர்களுக்கு சுமார் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here