இலங்கையில் இணையத்தளத்தினுாடாக பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த இளம் யுவதி!

0

இலங்கையில் இணையத்தளத்தினுாடாக பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த இளம் யுவதியொருவர் நேற்று (02) வாத்துவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகவர் ஒருவரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாணந்துறை, வலான பிரதேசத்தில் வைத்து இப்பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி-பூஜாபிட்டியவைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

கைது செய்யப்பட்ட பெண் நேற்று (02) பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகியதையடுத்து 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இப்பாலியல் தொழிலுடன் தொடர்புடைய ஏனையோரைத் தேடி வாத்துவ பொலிஸாரர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here