இலங்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் – பொலிஸார் மோதல்..! ஒருவர் பலி…

0

இலங்கையில் றம்புக்கனையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில், ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்த மோதலில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 7 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக, கேகாலை வைத்தியசாலை பணிப்பாளர் எமது செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தினார்.

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டி – கொழும்பு தொடருந்து மார்கத்தை றம்புக்கனை பகுதியில் மறித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க றம்புக்கனை காவல்துறை கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில்,

ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஆர்ப்பாட்டகாரர்கள் காவல்துறையினரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சிலர் காயமடைந்துள்ளதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலில் காவல்துறையினரும் காயமடைந்துள்ளனர்.

அத்துடன், அப்பகுதியில் அமைதியை பேணுவதற்கு காவல்துறையினர் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here