இலங்கையில் அறிமுகமாகும் அதிரடி நடவடிக்கை! பொது இடங்களுக்கு பயணிக்க தடை

0

தடுப்பூசி செலுத்திக்கொண்டதை உறுதிப்படுத்தும் தடுப்பூசி அட்டை இல்லாமல் செப்டம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்வது தடை செய்யப்படும் என இராணுவ தளபதி சவேந்திரசில்வா குறிப்பிட்டார்.

பொது மக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது தடுப்பூசி அட்டையை வைத்திருக்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு கடுமையான முறையில் நடைமுறைப்படத்தப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயற்குழுவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாகாணங்களுக்க இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here