இலங்கையில் அறிகுறிகளின்றி உயிரை பறிக்கும் டெல்டா! வெளியான அதிர்ச்சி தகவல்

0
First aid

கொவிட் மூன்றாம் அலையில் அடையாளம் காணப்பட்ட டெல்டா மாறுப்பாட்டின் பக்கவிளைவாக எவ்வித நோய் அறிகுறிகளும் தென்படாமல் மாரடைப்பு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறு மாரடைப்பிற்கு உள்ளாகும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் கடந்த வாரம் 20 நோயாளிகளுக்கு என்ஜியோ ப்லாஸ்டிக் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிறப்பு இருதய அறுவை சிகிச்சை நிபுணர் கோத்தாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

முதலாம் இரண்டாம் கொவிட் அலையின் போது அவ்வாறு மாரடைப்பிற்குள்ளாகும் கொவிட் நோயாளர்களை காண கிடைக்கவில்லை. மூன்றாவது அலையின் கொவிட் டெல்டா மாறுபாடு காரணமாக இந்த நிலைமையை அவதானிக்க முடிந்துள்ளது.

மாரடைப்பிற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அதிகமானவர்கள் இளம் வயதுடைய நபர்களாகும். பொதுவாக அதிக இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரோல் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கே மாரடைப்பு ஏற்படுகின்றது. எனினும் அவ்வாறான நோயினால் பாதிக்கப்படாதவர்களுக்கே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

சில கொவிட் நோயாளர்களுக்குள் சாதாரணமாக ஏற்படுகின்ற பிரதான நோய் அறிகுறிகளாக மாரடைபே காணப்படுகின்றது.

குறைந்த வயதுடையவர்களாக இருந்தாலும் மாரடைப்பிற்கான அறிகுறிகள் காணப்பட்டால் தாமதமின்றி தேசிய வைத்தியசாலையில் அனுமதியாக வேண்டும்.

அவ்வாறான நோயாளிகளை காப்பாற்றுவதற்கு தான் உட்பட குழுவினர் தொடர்பில் செயற்பட்டு வருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here