இலங்கையில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க கோரிக்கை

0

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளைக் கருத்தில் கொண்டு அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு இடம்பெறாவிட்டால், எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அனைத்து நிறுவனங்களின் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க, அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார மற்றும் ஜே.வி.பியின் நிர்வாக செயலாளர் கே.டி. லால்காந்த ஆகியோர் கொழும்பில் நேற்று(28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இது தொடர்பில் கருத்து தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here