இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தொடர்பில் வெளியான தகவல்!

0

இலங்கையை முழுமையாகத் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் 21ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அதனபடி 21ஆம் திகதி அதிகாலை 04 மணியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நிறைவுக்கு வரும் என்றும், அதன் பின்னர் நாட்டின் வழமையான செயற்பாடுகளை தொடர்வது பற்றிய பரிந்துரைகளை அறிக்கையாக முன்வைக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணித்திருக்கிறார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 21ஆம் திகதி அமெரிக்கா நோக்கி பயணிக்கவுள்ளார்.

எனவே, அமெரிக்கா செல்வதற்கு முன்னதாக நாடு திறக்கப்படுகின்ற தீர்மானம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here