இலங்கையில் அமுல்படுத்தப்படவுள்ள கட்டுப்பாடுகள்!

0

திருமண மற்றும் மரண வைபவங்களை நடத்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, 500 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 150 பேர் மாத்திரமே கலந்துகொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 500 இருக்கைகளுக்கு குறைந்த திருமண மண்டபங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 100 பேர் மாத்திரமே கலந்துகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மரண வீடொன்றில் ஒரு சந்தர்ப்பத்தில் 25 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் எனவும் இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களை சுழற்சி முறையில் கடமைக்கு அழைப்பது தொடர்பில் நிறுவனத் தலைவரே தீர்மானிக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அரச நிகழ்வுகள் அனைத்தும் செப்டெம்பர் 1ஆம் திகதி வரை இரத்துச் செய்யப்படுவதாகவும் இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடு முழுமையான அளவில் முடக்கப்படாது எனவும் இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here