இலங்கையில் அமுலாகியுள்ள பயணக் கட்டுப்பாடு தொடருமா?

0

இலங்கையில் மீளவும் நடமாட்டக் கட்டுப்பாடு அமுலாகியுள்ளது.

நேற்றிரவு புதன்கிழமை 10 மணிக்கு அமுலான இந்த நடமாட்டக் கட்டுப்பாடு நாளை அதிகாலை 4 மணி வரையில் தொடரவுள்ளது.

மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே தங்கியிருந்து, தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய செயற்படுமாறு காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண கோரியுள்ளார்.

அத்தோடு அத்தியாவசிய சேவையில் ஈடுபடுகின்றவர்கள் மாத்திரம் வீடுகளில் இருந்து வெளியே செல்ல முடியும்.

மேலும் காவல்துறையினரால் நடமாடும் மற்றும் உந்துருளி கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எவரேனுமு் ஒருவருக்கு திடீர் சுகயீனம் ஏற்றபட்டால், அருகிலுள்ள வைத்தியசாலைக்கு செல்ல அனுமதி உண்டு.அத்தோடு , மனிதாபிமான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காகவும் வெளியே செல்ல முடியும் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 25ம் திகதிக்கு பின்னர் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்துவது குறித்து இதுவரை எந்தவித தீர்மானமும் எட்டப்படவில்லையென இராணுவ தளபதி கூறியுள்ளார்.

எனினும், எதிர்வரும் நாட்களில் காணப்படுகின்ற நிலைமையை கருத்திற் கொண்டு பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுவது குறித்து அவதானம் செலுத்தப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நாடு தொடர்ந்தும் அபாயத்திலேயே காணப்படுவதாக சுகாதார பிரிவினர் தொடர்ந்தும் கூறி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here