இலங்கையில் அபாய வலயமாக மாறிய மட்டக்களப்பு

0

மட்டக்களப்பு மாவட்டத்தில், 1,300 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்றியுள்ளதென சந்தேகிக்கப்படுவதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே. சுகுணன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி கூட்டம் நேற்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

மேலும், 40 கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here