இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

0

இலங்கையில் மேலும் 23 பேர் நேற்று கொரோனாவால் உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, இலங்கையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,484 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 567,682 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் தொற்றில் இருந்து மேலும் 362 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, இதுவரை தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 542,688 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here