இலங்கையில் அதிகரிக்கும் பால்மா விலை?

0

ஒரு கிலோகிராம் பால்மா பக்கட்டின் விலை 200ரூபாயை உயர்த்த நிதியமைச்சு அனுமதி அளித்துள்ளது.பால்மா இறக்குமதியாளர்கள் மற்றும் நிதியமைச்சருக்கு இடையிலான கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த விலை அதிகரிப்பை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதியமைச்சருடனான சந்திப்பின் போது உலக சந்தையில் பால்மா விலை அதிகரிப்பின் காரணமாக இலங்கையில் கிலோ ஒன்றுக்கு 340 ரூபா விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டுமென பால்மா இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியதாகவும், ஆனால் நிதியமைச்சர் 200 ரூபா விலை அதிகரிப்புக்கு இணக்கம் வெளியிட்டதாகவும் அறியமுடிகிறது.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here