இலங்கையில் அதிகரிக்கும் வாய் புற்றுநோய்

0

இலங்கையில் கடந்த 20 வருடங்களில் வாய் புற்றுநோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 9 மடங்குகளாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய புற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவிக்கின்றது.

இவ்வாறு வாய் புற்றுநோயினால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள் எனவும் குறித்த பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

வாய் புற்றுநோய் அதிகரிப்பதற்கு, பாக்கு பயன்பாடு பிரதான காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிடுகின்றது.

2019ம் ஆண்டு புதிய வாய் புற்றுநோய்க்குள்ளான சுமார் 2,700 பேர் பதிவாகியிருந்த நிலையில், நாளாந்தம் வாய் புற்று நோய் காரணமாக இரண்டு அல்லது மூன்று மரணங்கள் பதிவாகி வருவதாகவும் தேசிய புற்றுநோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here