இலங்கையில் அதிகரிக்கும் முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளி கடத்தல்கள்! பொலிஸார் எச்சரிக்கை

0

இலங்கையில கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 3 உந்துருளிகள் மற்றும் 4 முச்சக்கர வண்டிகள் கடத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை, பொரளை, கொழும்பு, தெமட்டகொடை, புத்தளம், அத்துருகிரிய, அம்பலாங்கொடை மற்றும் கந்தானை ஆகிய பகுதிகளில் இவ்வாறு உந்துருளிகள் மற்றும் முச்சக்கரவண்டிகள் என்பன கடத்தப்பட்டுள்ளன.

அத்துடன் பண்டிகை காலத்தில் முச்சக்கரவண்டிகள் மற்றும் உந்துருளிகள் என்பன அதிகளவில் கடத்தப்படும் சம்பவங்கள் பதிவாகுவதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கடத்தல்களை குறைப்பதற்கு வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்த வேண்டும்.

அங்கீகாரம் பெற்ற வாகன தரப்பிடங்களில் மாத்திரம் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லுமாறும் மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here