இலங்கையில் அதிகரிக்கப்பட்ட பேருந்து பயணக் கட்டணம் இன்று முதல் அமுலாகிறது!

0

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை அடுத்து 35 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்ட பேருந்து பயணக் கட்டணம், இன்று முதல் அமுலாகிறது.

இதற்கமைய குறைந்த பட்ச பேருந்து பயணக் கட்டணம் 27 ரூபாவாகும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த கட்டண அதிகரிப்பு இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளுக்கும் பொருந்தும் என அவர் குறிப்பிட்டார்.

35 சதவீதத்தால் பேருந்து பயணக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த முறை எரிபொருளின் விலை பாரிய தொகையால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பேருந்து கட்டணம் அதிகரித்துள்ள போதிலும் தொடருந்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முச்சக்கரவண்டி சாரதிகள் தங்களது பயணிகளுடன் கலந்துரையாடி கட்டணம் தொடர்பில் தீர்மானிக்க முடியும் என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்தார்.

தற்போது எரிபொருளுக்கு மாத்திரமின்றி வரிசையில் காத்திருக்கும் அதிகளவான நேரத்திற்கும் கணக்கிடப்பட வேண்டும்.

எனவே, பயண கட்டணத்தை சாரதிகளே தீர்மானிக்க முடியும்.

அத்துடன் பயணிகளிடம் அதிகளவான கட்டணம் அறவிடுவிதை தவிர்க்குமாறும் அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர கோரியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here