எலிக் காய்ச்சலால் இலங்கையில் பலர் உயிரிழந்து வருவதாகத் தெரிவிக்கும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, குறிப்பாக 2019ஆம் ஆண்டு 100 பேரும், 2020ஆம் ஆண்டு 104 பேரும் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் நேற்றைய (07) அமர்வில் கலந்துக்கொண்டு வாய்மூல விடைக்கான வினாவை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், எலிக் காய்ச்சல் ஏற்பட்ட நோயாளர்கள் தொடர்பான தகவல்கள் அந்த நோயாளரின் பிரதேசத்துக்குப் பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரிக்கு வழங்கப்படும். இவர்கள் நோயாளரின் வீட்டுக்கு சென்று எவ்வாறு அந்த நோய் பரவியது என்பதுத் தொடர்பில் ஆராய்வார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும் எலிக் காய்ச்சலுக்கான நோய் அறிகுறிகளைக் கொண்டவர்கள் நோயாளரின் வீட்டில் இருந்தால் அவர்களுக்கு தேவையான சிகிச்சையளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.