இலங்கையிலும் லம்ப்டா வைரஸ் பரவுவதற்கான அபாயம்

0

வெளிநாடுகளில் சடுதியாக பரவி வரும் லம்டா கொரோனா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

லம்டா வைரஸ் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு மிகுந்த அவதானத்துடன் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த வைரஸ் பிறழ்விற்கான மாதிரிகளை தொடர்ந்தும் பரிசோதித்து வருகிறது.

லம்டா கொரோனா வைரஸ் பிறழ்வு நாட்டிற்குள் பரவாதிருப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என தெரிவித்துள்ளார்.

நாட்டில் மேலும் 40 கொரோனா மரணங்கள் நேற்று (08) உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here