நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும், அவர் டுபாய் சென்றுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 3ம் திகதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த நாமல் ராஜபக்ச, அன்றிரவே டுபாய் சென்றுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக நாமல் ராஜபக்சவின் குடும்பத்தினர் (மனைவி, மகன் மற்றும் மாமியார்) ஏப்ரல் 2ம் திகதி வெளிநாட்டிற்கு சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், நாமல் ராஜபக்சவின் குடும்பம் டுபாயிலிருந்து மேற்கத்திய நாட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.