இலங்கையிலிருந்து பணிப்பெண்களாக செல்பவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்!

0

இலங்கையிலிருந்து பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அழைத்துச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகளின் உண்மை தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, இந்த கடத்தல்காரர்களை கண்டுபிடிப்பதற்கு விசேட புலனாய்வு குழுக்களை நியமிக்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இந்தக் கடத்தலில் ஈடுபடும் ஏஜென்சிகள், தூதரக அதிகாரிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள், குடிவரவு அதிகாரிகள் ஆகியோரைக் கண்டறிந்து சட்டத்தை நடைமுறைப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

ஏற்கனவே நாற்பத்தொரு ஆதரவற்ற பெண்கள் ஓமானில் உள்ள காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதில் ஒன்பது பெண்கள் சுயநினைவை இழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here