இலங்கையின் பிரதமர் பதவியில் மாற்றமா? வெளியான அறிவிப்பு!

0

2022ஆம் ஆண்டில் பிரதமர் பதவியில் மாற்றம் வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுவது அடிப்படை ஆதாரமற்றது என அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித் துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், 2022ஆம் ஆண்டு பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கவுக்கோ அல்லது பசில் ராஜபக்ஷவுக்கோ வழங்கும் திட்டம் உள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் வெளிநாட்டு உறவுகளை வலுப்படுத்தவும் வெளிநாட்டுக் கடன்களைப் பெறவும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்கும் திட்டம் உள்ளதா எனவும் அவர் கேட்டார்.

இதற்கு பதிலளிக்கும் போதே, இந்த விவகாரம் அடிப்படை ஆதாரமற்றது என அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here