இலங்கையின் பாதாள உலகக் குழு உறுப்பினர் கைது

0

இலங்கையில் முல்லேரியா பகுதியில் பொலிஸ் விசேட அதிரடைப் படையினர் முன்னெடுத்த சோதனையின் போது பாதாள உலக குழு நபரான சீட்டி எனப்படும் சரத்குமார என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சீட்டி, அவரது வீட்டில் நிலத்தடியில் அமைக்கப்பட்ட ஒரு பதுங்கு குழியில் பதுங்கியிருந்த போது இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் வெலிகம பகுதியில் 112 கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒன்பதாவது சந்தேக நபர் இவர் என பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.

அங்கொட லொக்காவுடன் தொடர்பிலிருந்ததாக கூறப்படும் இவர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மறைந்திருந்த சந்தர்ப்பத்தில் அவரை கைதுசெய்ய பொலிஸாரும், விசேட அதிரடைப் படையினரும் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் அவர் வீடு திரும்பியுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக பொலிஸ் விசேட அதிரடைப் படையினர் முன்னெடுத்த சோதனையின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here