இலங்கையின் தனியார் வங்கிகள் மூடப்பட்டன

0

இலங்கையின் பிரதான தனியார் வங்கிகள் தமது கிளைகளை இன்று(07) முதல் மூடவுள்ளதாக அறிவித்துள்ளன. அதிகரிக்கும் கொரோனா தொற்றை அடுத்து நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதற்கு இணங்கும் வகையில் தமது கிளைகளைகளையும் மூடுவதாக வங்கிகள் அறிவித்துள்ளன.

வாடிக்கையாளர்களின் வருகை குறைவு மற்றும் பணியாளர்களுக்கு உரிய நேரத்திற்கு சமூகமளிக்க முடியாமை ஆகிய விடயங்களை கருத்திற் கொண்டு, வங்கிகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வங்கிகள் அறிவித்துள்ளன.

தன்னியக்க இயந்திரங்கள், இலத்திரனியல் வங்கி சேவைகளை பயன்படுத்தி, வங்கி சேவைகளை இன்று முதல் முன்னெடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அரச வங்கிகள் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here