இலங்கையின் தனிநபர் வருமானத்தை 8000 டொலராக அதிகரிக்க தீர்மானம்.!

0

2030ம் ஆண்டளவில் நாட்டின் தனிநபர் வருமானத்தை 8 ஆயிரம் டொலராக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை முதலீட்டு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். மேலும், தற்போது காணப்படுகின்ற சகல சவால்களையும் வெற்றிகொண்டு நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் பணியை நிறைவேற்றுவதாக இங்கு உரையாற்றும் போது ஜனாதிபதி தெரிவித்தார். 65 நாடுகளின் பிரதிநிதிகளின் பங்கேற்றலுடன் இலங்கை முதலீட்டு மாநாடு இன்று காலை ஆரம்பமாகியது. 3500 க்கும் கூடுதலான உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.

வீடியோ தொழிநுட்பம் ஊடாக மாநாட்டை நாளை மறுதினம் வரை நடாத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இலங்கை முதலீட்டு சபை, இலங்கை வர்த்தக சபை மற்றும் கொழும்பு பங்குச் சந்தை பரிமாற்றல் பிரிவு என்பன இணைந்து இதனை ஒழுங்கு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here