இலங்கையின் சீரற்றகாலநிலையால் மின்சார தடை

0

இலங்கையில் சீரற்றகாலநிலை காரணமாக நாடு முழுவதும் பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சார சபையின் தொலைபேசி நிலையத்திற்கு மணித்தியாலத்திற்கு 5000 அழைப்புகள் வருவதாக அதன் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வரும் தொலைபேசி அழைப்புகளில் 1000 அழைப்புகள் வரையில் பதிலளிக்க கடினமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று மாலை 76000 வீடுகளுக்கு மின்சார தடை ஏற்பட்டுள்ளது.

கடும் காற்றுடன் மரங்கள் முறிந்து விழுந்தமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இயல்புநிலைக்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் சீரற்ற காலநிலை காரணமாக தாமதம் ஏற்படுவதாக மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here