இலங்கையின் சில பிரதேசங்களில் இன்றும் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகின!

0

எரிவாயுக்களின் கலவை செறிமானத்தை ஒழுங்குபடுத்துவதற்கு எந்தவொரு நிறுவனமும் இல்லாதமை வருத்தமளிப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்றும் சமையல் எரிவாயு தொடர்பான பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மாத்தறை – நாவிமன, மீகொட – பானலுவ, மீரிகம, மொரட்டுவ – ராவதாவத்த, கெக்கிராவ ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு சமையல் எரிவாயு தொடர்பான பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இந்தச் சமையல் எரிவாயுவின் கலவை தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேற்கொண்ட விசாரணை அறிக்கைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனப் பெற்றோலிய தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here