இலங்கையின் சில பகுதிகளில் நீர் வெட்டு

0

இலங்கையில் களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் செயற்பாடானது தடை செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 8.30 மணி முதல் தடைசெய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி பயாகல, பேருவளை, பெந்தோட்டை, அளுத்கம, தர்கா நகர், மாகோனா, களுவாமோதர மற்றும் மொரகல்ல பகுதிகளில் இன்று காலை 8.30 மணி முதல் அடுத்த 24 மணிநேரம் வரையான நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, பிலிமினாவத்த, பாம்புவாலா, வாதுவ, மொராந்துடுவ வீதி, வஸ்கடுவ மற்றும் ஹபரலகஸ்லந்த ஆகிய பகுதியில் ஒன்பதரை மணிநேர நீர் வெட்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here