இலங்கையின் ஒரு பகுதியில் அமுலுக்கு வந்த பயணக்கட்டுப்பாடு!

0

குருநாகல் – கனேவத்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் தித்தவெல்காய பகுதியில் பயணக் கட்டுப்பாடு விடுக்கப்பட்டுள்ளது.

தித்தவெல்காய பகுதியில் 29 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்கானதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கனேவத்த சுகாதார வைத்திய அதிகாரி, டொக்டர் நாரத ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அப்பகுதியில் 70 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

64 குடும்பங்களைச் சேர்ந்த 267 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கணேவத்த சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரின் எண்ணிக்கை 96,439 ஆக பதிவாகியுள்ளது.

கொரோனா தொற்றினால் இதுவரை 617 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here