இலங்கையில் சமகால ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்துள்ளனர்.
இந்நிலையில் கோட்டபாயவை பதவி விலகக் கோரி மக்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலைியல் நாட்டிற்கு எவரும் தலைமை தாங்க முன்வராவிட்டால் ஹர்சாடி சில்வாவை ஆறு மாதங்களிற்கு காபந்து ஜனாதிபதியாக்கி அவரிடம் நாட்டை ஒப்படைக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எனது பிள்ளைகள் தாங்கள் நாடாளுமன்ற உறுப்பினரின் பிள்ளைகள் என தெரிவிப்பது குறித்து வெட்கமடைந்துள்ளனர் மக்களின் வேண்டுகோள்களை பூர்த்தி செய்வதற்கு அனைத்து எதிர்கட்சிகளும் முயலவேண்டும் என தெரிவித்துள்ளார்.
அரசியல் தலைவர்கள் தங்கள் தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலை கைவிட்டுவிட்டு மக்களினது நலனிற்காக ஒன்றிணைய வேண்டும்.
தேசிய நெருக்கடியை கருத்தில் கொண்டு ஒரு வருடத்திற்கு சம்பளத்தை பெறப்போவதில்லை. நாடாளுமன்ற உணவு விடுதியில் சாப்பிடப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கோட்டபாயவுக்கு எதிராக மக்கள் சக்தி தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி பதவியில் இருந்து விலகப் போவதில்லை என தெரிவித்துள்ளதாக, அவருக்கு நெருக்கமான அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்பது தொடர்பில் பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.