இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய அறிவிப்பு

0

உலகில் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளை உள்ளடக்கி வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.

உலக உணவு திட்டத்தினால் குறித்த வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.

உலக உணவு திட்டத்தின் வரைப்படத்திற்கு அமைவாக மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, தெற்கு, மற்றும், வடமேல் ஆகிய மாகாணங்கள் உணவு அபாய வலயங்களாக இனங்காணப்பட்டுள்ளன.

அத்துடன் இலங்கை மக்களின் சனத்தொகையில் 63 இலட்சம் மக்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என உலக உணவு திட்டம் அறிவித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பினால் 60 சதவீதமான மக்கள் போசாக்கு குறைந்த உணவை உட்கொள்கின்றனர்.

இலங்கையின் நிலையை சீர் செய்வதற்கு விரைந்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இல்லையேல் எதிர்வரும் ஒக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதி மிகவும் கடுமையானதாக அமையும் என உலக உணவு திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here