இலங்கையர்களுக்கு பேரிடி – எரிவாயுவின் விலை மீண்டும் உயர்கிறது!

0

லிட்ரோ 12.5 கிலோ சமையல் எரிவாயுவின் விலையை 1,500 ரூபாவாக அதிகரிக்குமாறு லிட்ரோ நிறுவனம், நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயு தற்போது 2,675 ரூபாவுக்கு விற்பனையாகின்றது.

இந்நிலையில் டொலர் இல்லாத காரணத்தால் எரிவாயு இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் நிதி அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

அதேவேளை 1,800 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவுடன், கப்பலொன்று கடந்த 12 ஆம் திகதி இலங்கை வரவியிருந்தது.

எனினும், டொலர் இல்லாத காரணத்தால் நிறுவனம் ஐந்து நாட்கள் எரிவாயு விநியோகத்தை நிறுத்தி இருந்தது.

இந்த நிலையிலேயே மேற்படி கோரிக்கையை லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here