இலங்கையில் இந்த பண்டிகைக் காலத்தில் பெருமளவிலான மக்கள் பல்வேறு தேவைகளுக்காக கொழும்புக்கு வருவதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
குறிப்பாக காலி முகத்திடல், கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பிரதேசங்களில் அதிக நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த பகுதிகளில் இன்று 08 ஆம் திகதி பிற்பகல் கடும் வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
வாகன சாரதி அந்தப் பகுதிகளுக்குப் பதிலாக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.