இலங்கையர்களுக்கு அனுமதி வழங்கிய மத்திய கிழக்கு நாடு!

0

இலங்கை உட்பட 15 நாடுகளைச் சேர்ந்த பயணிகளை திங்கள்கிழமை முதல் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள ஐக்கிய அரபு இராஜ்ஜியம் அனுமதித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த பயணிகள் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கொவிட்-19 வைரஸுக்கு எதிரான முழுமையான தடுப்பூசியினை பெற்றிருக்க வேண்டும்.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு பயணிக்க விரும்பும் பயணிகள் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மற்றும் முறையான விசா வைத்திருந்தால் அவர்கள் செப்டம்பர் 12 ஆம் திகதி முதல் அனுமதிக்கப்படுவார்கள் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) தெரிவித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, வியட்நாம், நமீபியா, சாம்பியா, கொங்கோ ஜனநாயக குடியரசு , உகாண்டா, சியரா லியோன், லைபீரியா, தென்னாபிரிக்கா, நைஜீரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிளை இந்த அறிவிப்பு உள்ளடக்கியது.

இதேவேளை, முழுமையான தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட சுற்றுலாப் பயணிகளை பெங்கொக்கிற்குள் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்த அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்பும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும்,இதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி பெற்ற கொரோனா தடுப்பூசிகள் இரண்டு தடவையும் பெற்றிருத்தல் வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here