இலங்கையரின் தாக்குதலை தொடர்ந்து நியூசிலாந்து எழுத்துள்ள அதிரடி நடவடிக்கை

0

நியூசிலாந்து பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடுவது சட்டவிரோதம் என்ற புதிய பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில், சமீபத்தில் பல்பொருள் அங்காடியில் இலங்கையைச் சேர்ந்த ஒரு நபர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. காவல்துறையினர், உடனடியாக அவரை சம்பவயிடத்திலேயே துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

இந்த தாக்குதலுக்கு பின்பு, நியூசிலாந்தின் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள தவறுகள் வெளிவந்தது. இருப்பினும், விரைவாக புதிய பாதுகாப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் Jacinda Ardern தெரிவித்திருந்தார். இந்நிலையில் நாட்டில் இன்று புதிய பாதுகாப்பு சட்டமானது நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அதன்படி, நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடுபவர்களுக்கு 7 வருடங்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும். தீவிரவாத செயல்பாடுகளுக்கு திட்டமிடுவதை தடுப்பதற்காக இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இச்சட்டமானது, வாரன்ட் இல்லாமல் சோதனை செய்வதற்காக எந்த இடத்திலும் நுழைவதற்கும் மற்றும் கண்காணிப்பதற்கும் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குகிறது. மேலும் தீவிரவாத தாக்குதலுக்காக போர் பயிற்சியை மேற்கொள்வதும் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here