இலங்கைத் தமிழ் அகதிகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கை

0

தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல நலத்திட்டங்களை முன்னெடுக்கம் தீர்மானித்துள்ளார்.

இந்த நலத்திட்டங்களை மேற்கொள்வதற்காக 317 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, வீடுகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் இந்த நிதி ஊடாக மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நீண்டகாலமாக தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு, குடியுரிமை வழங்குதல், மீள இலங்கை திரும்புபவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு குழுவொன்றை நியமிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டசபையில் நேற்று தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் இதுவரை 3 இலட்சத்து 42 ஆயிரம் பேர் இந்தியா வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here