இலங்கைக்கு வந்த 5 மணிநேரத்தில் மீண்டும் அமெரிக்கா திரும்பிய பயணி – விசாரணை ஆரம்பம்

0

இலங்கைக்கு வந்த கையுடன் 05 மணிநேரத்தில் மீண்டும் அமெரிக்கா திரும்பிய சுற்றுலாப் பயணி தொடர்பில் அரசாங்கம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.

ஜோர்ஜ் என்ற குறித்த அமெரிக்க சுற்றுலாப் பயணி, கடந்த 07ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வழியாக இலங்கைக்குப் பிரவேசித்திருக்கின்றார். எனினும் அடுத்த 05 மணிநேரத்தில் அவர் மீண்டும் அமெரிக்காவுக்கே சென்றுவிட்டார்.

இதுபற்றி குறித்த அமெரிக்கப் பயணி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்.

அதில், இலங்கை வந்ததும் பயணத்தை மேற்கொள்ள போக்குவரத்து பிரச்சினை இருந்தமை மற்றும் தன்னுடன் தொடர்புகொண்ட சுற்றுலாப் பயணநிறுவனத்தை தொடர்புகொள்ள முடியாமற் போனமை போன்ற பிரச்சினைகளால் அவர் மீண்டும் அமெரிக்காவிற்கே சென்றதாக சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இந்த விடயத்தை அறிந்த சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here