இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம் – பிரித்தானிய விடுத்துள்ள எச்சரிக்கை!

0

அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில் இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம் என பிரித்தானியா அறிவுறுத்தியுள்ளது

தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மைக்கு மத்தியில் இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம் என பிரித்தானியா தனது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை காரணமாக, இலங்கைக்கான அத்தியாவசியப் பயணத்தைத் தவிர மற்ற அனைத்திற்கும் எதிராக பயண அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரஜைகள் தற்போது இலங்கையில் இருந்தால் அனைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும் எனவும் உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும் என்வும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த வார ஆரம்பத்தில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களிலும் வன்முறை வெடித்தது. இதில் பலர் கொல்லப்பட்டதுடன், 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இந்நிலையில், இலங்கையில் இருக்கும் பிரித்தானிய பிரஜைகள் விழிப்புடன் இருக்க வேண்டும், ஆர்ப்பாட்டங்கள் அல்லது பெரிய கூட்டங்களைத் தவிர்க்கவும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here