இலங்கைக்கு படையெடுக்கவுள்ள ஐரோப்பிய ஒன்றிய விஷேட பிரதிநிதிகள்

0

ஐரோப்பிய ஒன்றியத்தின் விஷேட பிரதிநிதிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்வுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை நீடிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

இலங்கை விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here