இலங்கைக்கு சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

0

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சுகாதார அதிகாரிகள் நேற்று இரவு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையில், கடந்த காலங்களைப் போலவே பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் ஏனைய கடுமையான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தவிர்க்க அனைவரும் பொறுப்போடு செயற்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியது ஒரு கடுமையான நிலைமைக்கு வழிவகுக்கும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்த பின்னரும் சில நாட்களிலேயே பல கடற்கரை விருந்துகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றும் அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அண்மையில் இலங்கையில் வைரஸின் புதிய வகைகள் கண்டறியப்பட்டதாகவும் இது தொடர்பான அறிவியல் தகவல்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தற்போது இலங்கையில் கொரோனாவின் புதிய வகைகள் பரவி வருகின்றதா என்ற சந்தேகம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.

இதேவேளை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வருகின்றது.தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்றும் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here