இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி – ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு

0

இலங்கையின் இன்றைய பொருளாதார வீழ்ச்சி, பிரித்தானியர் காலத்திலும், ஒல்லாந்தர் காலத்திலும், போர்த்துக்கேயர் காலத்திலும் ஏற்படாத ஒன்று என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் ரஜரட்ட ஆட்சியில், ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி,தற்போதைய வீழ்ச்சியை ஒத்திருந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இலங்கையின் இன்றைய பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுக் காணப்படவேண்டுமானால் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு செல்வதை விட வேறு வழியில்லை என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இது விரும்பியோ, விரும்பாமலோ மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையாகும் என்றும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

1997ம்ஆண்டு ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவின்போது, சர்வதேச நாணய நிதியமே முன் வந்து செயற்பட்டது என்றும் ரணில் குறிப்பிட்டார்.

உடல் சீரின்மையின்போது கசப்பான மருந்தை பயன்படுத்தியேயாக வேண்டும். அதன்படி, எதிர்வரும் 6 மாதக்காலங்கள் கஸ்டமான காலங்களாகவே இருக்கும் என்றும் ரணில் தெரிவித்தார்.

அத்துடன் 2023ஆம் ஆண்டு உலகப் பொருளாதாரத்தில் சிறப்பாக காணமுடியாது.

2024ஆம் ஆண்டில் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை அவதானிக்கமுடியும் என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

இதேவேளை பங்கு சந்தை, குறிப்பிட்டவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாமல், அனைவருக்கும் நன்மையளிக்கும் சுயாதீனத் தன்மையைக் கொண்டிருக்கவேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here