இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து! வெளியான எச்சரிக்கை

0

சில அமைச்சர்களின் நடவடிக்கைகள் காரணமாக அடுத்த மூன்றுமாதங்களில் மீண்டும் ஒரு அலை உருவாகலாம் என அறிவிக்ப்பட்டுள்ளது.

சுகாதாரதொழிற்துறையினரின் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பெருமளவு சுற்றுலாப்பயணிகளை நாட்டிற்குள் அனுமதிப்பது ஆபத்தான விடயம் என சங்கத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நடவடிக்கையால் அடுத்த மூன்று மாதங்களில் இன்னுமொரு அலை உருவாகும் ஆபத்துள்ளது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் பலன் ஆறுமாதங்களிற்கு மாத்திரம் நீடிக்கும் என ரஷ்ய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவைரசின் ஒவ்வொரு வகையும் தடுப்பூசிக்கு ஒவ்வொரு வகையான விளைவுகளை வெளிப்படுத்துகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களால் ஏனையவர்களிற்கு நோய் தொற்றுவதை தடுக்க முடியாது என்பது நன்கறியப்பட்ட விடயமாகும்.

இதேவேளை, கொரோனா தொற்று முடிவுக்கு வந்து விட்டது என நினைத்து மக்கள் அசமந்தமாக செயற்பட்டால் பாரிய ஆபத்தை எதிர்நோக்க நேரிடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் கமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதமளவில் கோவிட் ஐந்தாம் அலை உருவாகும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு, நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் கொரோனா தொற்றை மறந்து செயற்படுவதாகவும், அவர் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here