இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்தை ஒரு போதும் தடுக்க முடியாது! வைத்திய நிபுணர் அறிவிப்பு

0

இலங்கையை முடக்கினாலும், பயணக்கட்டுப்பாடுகளை விதித்தாலும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றினாலும் புதிய வைரஸ் பிறழ்வுகள் ஏற்படுவதை ஒருபோதும் தவிர்க்க முடியாது என வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தற்போது கூறப்படும் தென்னாபிரிக்க வைரஸான (சி.1.2) பிரதானமாக தனது எஸ் புரோட்டீன் தன்மையில் வேறுபாட்டை காட்டுகின்றது என கண்டறியபட்டுள்ளது. ஆகவே தான் இந்த வைரஸ் பரவினால் தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாது என கூறப்படுகின்றது.

இது வைத்திய நிபுணர்களின் சந்தேகமாக இருந்தாலும் அந்த சந்தேகத்தில் உண்மை உள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இலங்கையில் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் புதிய வைரஸ் பரவலாம். அதற்கான அச்சுறுத்தல் நிலைமை அதிகமாகவே உள்ளது.

காரணம் என்னவெனில், இலங்கை சுற்றுலாத்துறையை பிரதானமாக கொண்ட நாடாகும். நாட்டின் பொருளாதாரத்தில் அதிக பங்களிப்பை சுற்றுலாத்துறை செய்கின்றது. ஆகவே நாடு திறக்கப்படும் நேரங்களில் சவால்கள் எமக்குக் காத்திருக்கின்றன.

இதேவேளை, நியூஸிலாந்திற்கு எவ்வித நோயாளிகளும் நுழைவதற்கும் அனுமதி வழங்கப்படாத நிலைமையின் கீழும் இந்த ஆபத்தான வைரஸ் நாட்டிற்குள் நுழைந்ததென பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எல்பா மற்றும் டெல்டா மாறுபாடு நாட்டிற்குள் வருவதற்காக சில நடவடிக்கைகள் மேற்கொள்பட்டது. எனினும் அந்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் சமூகத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

எனவே தடுப்பூசிகளை நம்பியே எமது நீண்டகால வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. உலகில் 80 தொடக்கம் 90வீதமான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றி இந்த வைரஸும் சாதாரண காய்ச்சல் தலைவலி போன்றது என்ற நிலையை உருவாக்கினால் மட்டுமே எம்மால் சாதாரண நிலைக்கு செல்ல முடியும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here