இலங்கைக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு

0

பிணை முறிகளின் முழுத்தொகையையும் வட்டியுடன் செலுத்தக் கோரி இலங்கைக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 25 ஆம் திகதி முதிர்ச்சியடையும் பிணை முறிகளுக்கான கொடுப்பனவை செலுத்த தவறுகின்றமை தொடர்பில் பிணை முறிக்கு உரித்துடைய தரப்பு நியூயோர்க் பிராந்திய நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை கருத்திற்கொண்டு வெளிநாட்டுக் கடன்களை தற்காலிகமாக செலுத்த முடியாது என இலங்கை மத்திய வங்கி அறிவித்திருந்தது.

இதற்கு எதிராக இலங்கையின் 250 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பிணை முறிகளை கொண்டுள்ள ஹமில்டன் வங்கியினால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இலங்கையின் மொத்த பிணை முறிகளின் 5.875 சதவீதத்தை இந்த நிறுவனம் கொண்டுள்ளது.

குறித்த பிணை முறிகளின் முழுத்தொகையையும் வட்டியுடன் செலுத்தக் கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here