இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார அமைப்பு

0

இலங்கையில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் தீவிரம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிப்பதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் கேப்ரியாசெஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் காணப்படும் நிலைமை தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்படுகின்றது.

அதற்கு மேலதிகமாக நேபாளம், இலங்கை, வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் தேவைகள் உள்ள நாடுகள் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி தடுப்பூசி போடுவதும் சரியான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here