இலங்கைக்குள் ஆடம்பரப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடையா ?

0

ஆடம்பரப்பொருட்களை இறக்குமதி செய்வதை தடை செய்வதற்கு அல்லது இறக்குமதிக்கு கடுமையான கட்டுப்பாடு விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வீட்டுப்பாவனை மின் உபகரணங்கள், கைபேசிகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள் அல்லாத வகைகளுக்கும் அடங்கும் பொருட்களுக்காக இறக்குமதித் தடை விதிக்கப்படவுள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு கட்டுப்பாடு விதிக்கப்படும் திகதி மற்றும் அந்த கால எல்லை எவ்வளவு காலம் செல்லுபடியாகும் என்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை.கட்டுப்பாடு விதிக்கக்கூடிய பொருட்கள் தொடர்பான பட்டியலை தயாரிக்கும் பொறுப்பு மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை, இதுதொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் மேலதிக கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும் கடந்த சில நாட்களாக, உள்நாட்டுச் சந்தையில் வெளிநாட்டு நாணயத் திரவத்தன்மையின் ஊகிக்கப்பட்ட பற்றாக்குறையொன்று காணப்படும் நிலையில், இந்த நிலைமை தொடருவதனை தவிர்த்துக்கொள்ளும் முகமாக மேற்படி தீர்மானத்துக்கு வந்துள்ளதாக மத்திய வங்கி பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இரண்டு வருடங்களுக்காவது வாகன இறக்குமதிக்கு தடை விதிக்க நேரிடும் என கடந்த வாரம் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here