இலங்கைக்கான பயணதத்தடை நீடித்த இத்தாலி அரசு

0

இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட பி.1.617 என்ற திரிபடைந்த கொரோனா வைரஸ் காரணமாக தெற்காசிய நாடுகள் பாரிய பேரழிவை எதிர்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரவேசிப்பவர்களுக்கான தற்காலிக தடையை இத்தாலி மேலும் நீடித்துள்ளது.

இத்தாலி பிரஜைகள் உள்வாங்கப்படாத இந்த தடை கடந்த ஏப்ரல் மாத இறுதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினத்துடன் இந்த தடை நிறைவடையும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரவேசிப்பதற்கான தடை எதிர்வரும் ஜூன் மாதம் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here