இறுதி யுத்தத்தில் சரணடைந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் சிறீதரன் கேள்வி

0

இறுதி யுத்தத்தின் முடிவில் தங்கள் குடும்பங்களோடு சரணடைந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு என்ன நடந்தது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புப் போரின் இறுதிக் கணங்களில், படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து பல சிறுவர்கள் அதிலும் குறிப்பாக விடுதலைப்புலிகளின் முதல்நிலை உறுப்பினர்களின் பலரது பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 14 பேரின் பிள்ளைகளின் தகவல்களை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், இவர்கள் சரணடைந்ததற்கான சாட்சிகள் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறைச்சாலைகளில் எத்தனையோ பெண்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குழந்தைகளோடு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தற்போதும் தமிழர்களை சித்திரைவதை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 39 பேர் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்டபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here