இறுதிச்சடங்கில் இறந்த நபரின் உடல் அசைவால் அதிர்ச்சிக்குள்ளாகிய குடும்பம்…

0

லெபனான் நாட்டிலுள்ள Hermel நகரில், இறந்த ஒருவரை சவப்பெட்டியில் வைத்து இறுதிச்சடங்குக்காக தயார் செய்துகொண்டிருந்திருக்கிறார்கள்.

அப்போது பெண் ஒருவர் அந்த உடலை தொட்டபடி அழுதுகொண்டிருந்திருக்கிறார்.

திடீரென இறந்த அந்த நபரின் உடல் நகர்வதையும், அவர் சுவாசிப்பதையும் கண்ட மக்கள் பதறிப்போய் அவருக்கு முதலுதவி அளித்துள்ளனர்.

மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ள நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிருடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அந்த நபர் யார், அவர் இறந்ததாக அறிவித்தது யார் என்பது போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here