இறந்த மனைவியின் சடலத்துடன் 21 வருடம் வாழ்ந்த முதியவர்

0

தாய்லாந்தில் காதல் மனைவியின் சடலத்தை 72 வயதான முதியவர் 21 ஆண்டுகளுக்குப் பிறகு தகனம் செய்துள்ளார்.

மனைவியின் சாம்பலை வீட்டிலேயே வைத்து, அவரது பெயரில் அறப்பணி செய்துவருகிறார் சார்ன் ஜன்வாட்சாக்கல் (Mr Charn).

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மனைவியின் உடலை வீட்டிலேயே வைத்து அதனுடன் பேசியும் மனைவியின் சடலம் வைக்கப்பட்ட சவப்பெட்டி பக்கத்தில் சார்ன் (Mr Charn) தூங்கி வந்தார் .

இதை ஏற்றுக்கொள்ள முடியாத அவரது இரண்டு மகன்களும் வீட்டைவிட்டு வெளியேறினர்.

பின்னர், மனைவிக்கு முறையான இறுதிச்சடங்கு நடக்குமா என்ற அச்சம் எழுந்த பிறகு, தாம் உயிருடன் இருக்கும் போதே மனைவிக்குப் பிரியாவிடை சார்ன் கொடுக்க முடிவெடுத்தார்.

மனைவியின் நல்லுடல் தகனச்சாலைக்கு எடுத்துசெல்லப்பட்டபோது, சார்ன் (Mr Charn) கதறி கதறி அழுதாக கூறப்படுகின்றது.

அதன்பின்னர் அவர், மனைவியின் சாம்பலை ஒரு வெள்ளைத் துணியில் சுற்றி அதை வீட்டுக்கு எடுத்துச்சென்றார்.

தாய்லாந்து இராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, சுகாதார அமைச்சில் வேலைபார்த்துக்கொண்டிருந்த தமது மனைவியைச் சந்தித்த அனுபவத்தை சார்ன் நினைவுகூர்ந்துள்ளார்.

21 ஆண்டுகளாக மனைவியின் சடலத்துடன் வாழ்ந்துவந்த நபர்! - கனடாமிரர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here