இறந்த பன்றிக்கு உயிர் வழங்கிய விஞ்ஞானிகள்… அறிவியலாளர்கள் மத்தியில் அதிர்வலைகள்

0

அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ஞான குழு ஒன்று பன்றிகளை வைத்து கடந்த 2019-ஆம் ஆண்டு சோதனை நடத்தியது.

அதாவது செயற்கை முறையில் பன்றிகளுக்கு மாரடைப்பை தூண்டி அவற்றின் இயக்கத்தை நிறுத்தியுள்ளது.

இப்படி இறந்த பன்றிகளை ஒரு மணித்தியாலம் வைத்திருந்து பன்றிகளின் சொந்த இரத்தத்தை ஒரு திரவத்துடன் கலந்து உடல்களில் பம்ப் செய்துள்ளனர்.

இந்த செயலின்போது, இரத்த அணுக்களுக்கு ஒட்சிசனை சுமந்துசெல்லும் ஹீமோகுளோபினும் செலுத்தப்பட, இரத்தம் கட்டியாகுதலை தடுத்து செல்களை பாதுகாக்கும் மருந்துகளும் செலுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 6 மணித்தியாலம் சோதனைக்கு பின் இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புகளில் இருந்த செல்கள் செயல்பட ஆரம்பித்துள்ளது.

பன்றிகளின் தலைகளில் அசைவும் தெரிந்துள்ளது.

இச்சம்பவம் விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த ஆய்வு ஆனது நேச்சர் இதழில் வெளியாகி உலக அறிவியலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து, இறந்த செல்கள் உயிர்பெறுவது என்பது கிட்டத்தட்ட இறந்த உயிருக்கு மீண்டும் உயிர் கொடுப்பது போன்ற விடயமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here